

சூழல் பாதுகாப்புக்கான ரூ.1 கோடி ‘பசுமை சாம்பியன் விருது’ – ஜனவரி 20க்குள் விண்ணப்பிக்கலாம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்பு செய்யும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஊக்கமாக, தமிழக அரசு “பசுமை சாம்பியன் விருது” வழங்கி வருகிறது. 2021–22ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 பேருக்கு தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
பசுமை சாம்பியன் விருது 2025 க்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பின்வரும் துறைகளில் சிறந்த செயல்பாடுகளைச் செய்தவர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்:
• சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி
• சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
• பசுமை தொழில்நுட்பம் / பசுமை தயாரிப்பு ஆராய்ச்சி
• நிலையான வளர்ச்சி
• திடக்கழிவு மேலாண்மை
• நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு
• காலநிலை மாற்றத்துக்கு தழுவல் மற்றும் தணிப்பு
• பிளாஸ்டிக் கழிவு கட்டுப்பாடு மற்றும் மறுசுழற்சி
• சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு
• கடலோர பாதுகாப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் சார்ந்த முயற்சிகள்
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட விருதுக் குழு (DLAC) மூலம் தேர்வு செய்யப்படும்.
விருதுக்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது: www.tnpcb.gov.in
மேலும் தகவல்களுக்கு:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் – மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், திருச்சிராப்பள்ளி.
விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 20.01.2026