

துறையூர்:ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சிஎஸ்ஐ பள்ளி சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி##
திருச்சி மாவட்டம் துறையூரில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மற்றும் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி சார்பில் “உலக மக்கள் தொகை” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.உலக மக்கள் தொகை தினம் முன்னிட்டு
25 7 2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்ற பேரணி சிஎஸ்ஐ
பள்ளி வளாகத்தில் இருந்து முசிறி பிரிவு சாலை ரவுண்டானாவரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் வந்தடைந்து நிறைவு பெற்றது.
தலைமை ஆசிரியர் இயேசுகுமார் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் ஆனந்த்குமார் முன்னிலையில்
கலந்து கொண்ட மாணவர்கள் 116. ஆசிரியர்கள் 12. செவிலியர் 2 .
விழா ஏற்பாடு ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா.
நிகழ்வில் அருள்திருமதி, ராஜாமணி ஆகியோர் வாழ்த்தி நிறைவு செய்தார்.
பேரணிக்கு துறையூர் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு தந்து சிறப்பித்தனர் என தெரிவிக்கப்பட்டது.