

முன்னாள் முதல்வர்#
#மு கருணாநிதி#
#டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்#
##துறையூரில் மாபெரும் அமைதிப்பேரணி##
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கும் அனுசரிக்கப்பட்ட நிலையில் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது.
07-08-2025 அன்று காலை 9 மணி அளவில் துறையூர் பாலக்கரையில் கலைஞர் மு கருணாநிதியின் நினைவு தினம் முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்துடன் துவங்கிய அமைதி பேரணி திருச்சி சாலை வழியாக துறையூர் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது.
துறையூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் மு கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ் ஒலிக்க நினைவஞ்சலி நடைபெற்றது.
நிகழ்வில்
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,மாவட்ட பொருளாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் இள.அண்ணாதுரை, சிவ.சரவணன்,வீரா என்கிற எம்.வீரபத்திரன் மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம், நகர்மன்ற தலைவர் செல்வராணிமலர்மன்னன், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன்தாஸ்,மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கண்ணனூர் குமார், துறையூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ர.சசிகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், அம்மன்பாபு, கார்த்திகேயன் மற்றும் துறையூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரம் ஒன்றியம் உள்ளிட்ட தொண்டர்கள் என அனைவரும் கலந்து
கொண்டனர்.