

எடப்பாடி பழனிச்சாமி துறையூர் வருகையை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி எதிர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஜுலை மாதம் 2025 /தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.
தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து அதிமுகவின் சாதனைகள் மற்றும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திமுகவை மாபெரும் வெற்றிபெற செய்ய வேண்டுமென மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி வடக்கு மாவட்டம் ஆகியவற்றுக்கு வருகை புரிவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து உடனடியாக முன்னாள் அமைச்சரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மு பரஞ்சோதி இன்று காலை 09-08-25 துறையூருக்கு வருகை புரிந்து வடக்கு மாவட்ட ஒன்றியம் நகரம் பேரூர் கழகம் மற்றும் கிளை ஆகிய நிர்வாகிகளை சந்தித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகை முன்னிட்டு துறையூர் நகரில் மாபெரும் வரவேற்பு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் இந்திரா காந்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் என். சங்கர், இளைஞர் அணி துணைச் செயலாளர் விவேக், வழக்கறிஞர் கார்த்திகேயன்,உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்மோகன், தெற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ்,
பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.