

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வனின் பிறந்த நளை முன்னிட்டு முத்துச்செல்வன் மாண்புமிகு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமையில் துறையூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் உப்பிலியபுரம் வடக்கு மற்றும் தெற்கு மற்றும் துறையூரைச்சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நண்பர்கள் உறவினர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொன்னாடை மற்றும் பூமாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் தனக்கு வாழ்த்துக்களை வாரிக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.