

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பிரமாண்டமான பேருந்து முனையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் )திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ள 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், 3 புறநகர் பேருந்துகள் மற்றும் 1 நகரப் பேருந்து உட்பட மொத்தம் 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று 10-08-25 கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ. சரவணன்,மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, ஆகியோருடன் அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்