Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை

நீதிமன்ற தீர்ப்பிற்க்கு போலீசார் வரவேற்பு

0 12
kaveri murasu ad
துறையூர் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவருக்கு ஒன்றரை வருடம் சிறைதண்டனை##

##துறையூர் நீதிமன்றம் தீர்ப்பு##
##காவல்துறையினர் வரவேற்பு##
திருச்சி மாவட்டம் துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவல் உதவியாளராக பணிபுரிந்தவர் வடமலை என்பவர். இவர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி போக்குவரத்து காவலர் விக்னேஷ் உடன் பாலக்கரையில் இருந்து திருச்சி செல்லும் பிரதான போக்குவரத்து நிறைந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும்

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த சிக்கம்பிள்ளையார் கோவில் தெரு  முத்துக்குமார் மகன் நந்தக்குமார் வயது 32 என்பவரை நிறுத்தி வாகன சோதனையை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு இருந்த கிழக்கு தெப்பக்குளம் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன் வயது 39 என்பவர் காவல் உதவி ஆய்வாளர் வடமலையிடம் எப்படி என் வண்டியை நிறுத்தலாம் என கூறி ஆபாசமாக பேசிக்கொண்டே கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து வடமலை துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் துறையூர் காவல்துறையினர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதாராணி
14 8 2025 அன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் குற்றவாளி வேல்முருகனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 332ன் கீழ் ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்தார் மேலும் அபராதம் செலுத்த தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேபோல் பிரிவு 353 இன் கீழ் ஆறுமாத சிறைதண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இந்த அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு காவல்துறையினர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசுபவர் மற்றும் தாக்குபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று காவலர்கள் மத்தியில் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் நீதித்துறையினரையும் பாராட்டியும் வருகின்றனர்.
Leave A Reply

Your email address will not be published.