

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலமாக விளங்கிவருவது கிழக்கு மேற்கு மலைத்தொடர்களை உள்ளடக்கிய பச்சைமலை.இம்மலையில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இம்மலை திருச்சி பெரம்பலூர் சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது.தற்போது
₹89 லட்சம் ரூபாய் செலவில் பச்சமலை சுற்றுலா தலத்தில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்ட வன அலுவலர் எஸ். கிருத்திகா கூறுகையில்…. “தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் 89 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் வசதி, பாதுகாப்பு போன்ற பல வேலைகள் நடந்துள்ளன. இதனால் நிறைய பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
டாப் செங்காட்டுப்பட்டியில் 51.11 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ‘A-Frame Eco Huts’ கட்டப்பட்டுள்ளன. இங்கிருந்து பார்த்தால் மலை ரொம்ப அழகாக தெரியும். மங்கலம் அருவியில் 10 லட்சம் ரூபாயில் கைப்பிடிகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. கோரையாறு அருவியில் 800 மீட்டர் தூரத்துக்கு கல் படிகள் மற்றும் குளிக்கும் இடம் 16 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. டாப் செங்காட்டுப்பட்டி பக்கத்தில் இருந்த பழைய பங்களா 11.9 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மரத்தின் மேல் இருக்கும் வீடுகளையும் சரி செய்யப்போகிறார்கள் மேலும்
இங்கு விரும்பி வரும் சுற்றுலா பயணிகளும் ஊர் மக்களும் இந்த மாற்றங்களை வரவேற்கிறார்கள் என்றார்.