

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கே. கருப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (12.08.2025) அன்று ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் கைப்பேசி பயன்படுத்துவதால் கண் பார்வை பாதிப்பு, தூக்கமின்மை, மனநல பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை உதவி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.முருகையா ஏற்பாடு செய்திருந்தார்.