Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் அருகே சந்திரகிரகணத்தை காண அழைப்பு

கலிங்கமுடையான்பட்டி சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சந்திர கிரகணத்தை காண ஏற்பாடு

0 90
kaveri murasu ad

ஸ்ரீ விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சந்திர கிரகணத்தை காண ஏற்பாடு##

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கலிங்கமுடையான்பட்டி சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் செப்டம்பர் 7 மற்றும் எட்டாம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு சந்திர கிரகணத்தை காண்பதற்கான நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகம் மற்றும்  இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அஸ்ட்ரோ நிறுவனம், தமிழ்நாடு சயின்ஸ் சொசைட்டி, திருச்சி அஸ்ட்ரோ கிளப், துறையூர் அஸ்ட்ரோ கிளப்  ஆகயவை இணைந்து ஏற்பாடுகள் செய்து வருகிறது.

துறையூரிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவில் இருக்கும் இப்பள்ளியில் அனுமதியும் இலவசமாக வழங்க இருக்கிறார்கள். மேலும் சந்திர கிரகணம் பற்றிய குறும்படமும் ஒளிபரப்ப இருக்கின்றது.

ஆதலால் துறையூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் 07-09- 2025 நாளை மாலை சந்திர கிரகணத்தை பற்றி அறியவும் சந்திர கிரகத்தை காணவும் பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்து வருகிறது.

ஆதலால் அனைவரும் வருகை தந்து சந்திர கிரகணத்தை கண்டு களிக்கவும் என பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் வைக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.