

சஞ்ஜீவி நகர் சந்திப்பில் ஒரு வாகன சுரங்கப்பாதை
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH) உள்ள சஞ்ஜீவி நகர் சந்திப்பில் ஒரு வாகன சுரங்கப்பாதை (VuP) அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிட்டுள்ளது. இது திருச்சியில் அடிக்கடி விபத்து நடக்கும் இடமாகும். இந்த வாகன சுரங்கபாதைக்கு தேவைதானா என்று முடிவு செய்ய, சமீபத்திய விபத்து விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்யும்.
சஞ்சீவி நகர் சந்திப்பு குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக இருப்பதால், இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த இடம் காவிரி ஆற்றங்கரை மற்றும் பால்பண்ணை ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் இருப்பதால் திட்டம் தாமதமாகிறது.
சுரங்கப்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்த தேவையில்லை. ஆனால், சஞ்சீவி நகரில் VuP அமைக்க 50 கோடி ரூபாய் செலவாகும்.
வாகன சுரங்கப்பாதை இல்லையென்றால், ஜி கார்னரில் உள்ளது போல மேம்பால சாலை சஞ்சீவி நகரில் அமைக்கப்படலாம்” என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.