

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி “நாளைத் தலைவர்கள்” விருதுகள் வழங்கும் விழா சத்திரம் பேருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது.இதில்

“ராஜராஜ சோழன் விருதுகள்” தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக சேவையாளர்களுக்கும்
தமிழ் பற்றாளர்களுக்கும் இயக்கத்தின் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நிறுவன தலைவர் டாக்டர் L. சுரேஷ் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர் மற்றும் சிறப்பு விருந்தினர் அரசு வழக்கறிஞர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
