

#துறையூர் பச்சமலை ஏரிக்காடு பகுதிகளுக்கு புதிய பேருந்து துவக்கம் #
“அருண் நேரு எம்பி துவக்கி வைத்தார்”
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இன்று (16-09-25) காலை துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள ஏரிக்காடு பகுதிக்கு இரண்டு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் ஏரிக்காடு பகுதி மலைவாழ் மக்களின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்த மூன்றாவதாக புதிய பேருந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது.
புதிய பேருந்தை பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்தார் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என் அருண் நேரு.
நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், துறையூர் அரசு பேருந்து பணிமனை கிளை மேலாளர் ஜெயச்சந்திரன், உதவி மேலாளர் (வணிகம்) சரவணன்,
நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத்தலைவர் முரளி,
முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன், உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.