

#எரகுடி, சிறு நாவலூர் ஊராட்சிகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்”#

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எரகுடி சிறுநாவலூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 18 9 2025 என்று எறங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமினை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு உடனடி பட்டா மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
மற்றும் வட்டாட்சியர் சிவக்குமார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், எரகுடி கிளைச் செயலாளர் எம் ஜி பாலா, சிறுநாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் கு.சுப்ரமணியன், தனபால் அசோக்ராஜ்,ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கு சுமார் 15 அரசுத்துறைகள் கலந்து கொண்டன சுமார் 46 சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் முகாமில் எரகுடி சிறுநாவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
முகாமில் ஊராட்சி செயலர்கள் அசோகன்,ராஜா, சுரேஷ், பழனியாண்டி ஆகியோர் அரசு பணியில் இருந்தனர்.