

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.
மதுரையைச் சேர்ந்த ரோபோ சங்கர் ஆரம்பத்தில் மேடை நகைச்சுவை கலைஞராக இருந்தவர்.
“தீபாவளி” திரைப்படம் மூலம் சினிமாவில் கவனிக்கப்பட்டார்.
விஸ்வாசம், மாரி, வாயை மூடி பேசவும், புலி, கோப்ரா, வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விஜய், தனுஷ், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலை, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.