

திருச்சியில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் நிறுவனம்: கே.என். நேரு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பெரிய நிறுவனம் அமைய இருப்பதாகவும், இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.
தமிழகத்திலும் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத பெரிய நிறுவனம் ஒன்று திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிப்காட்டில் அமைய உள்ளது. இந்த நிறுவனம் அமைந்தால் திருச்சியின் முகம் மாறிவிடும்.
பெரிய வளர்ச்சி பெறும் என்றும் அனைத்து தொழில் அதிபர்களும், அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். இதே போல, பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அமைச்சர் கே. என். நேரு கூறினார்.