

தொட்டியம் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளுக்கு நானோ உரங்களை பற்றிய கருத்தரங்கம் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளுக்கு நானோ தொழில்நுட்ப கருத்தரங்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பூமிகா, இப்கோ உதவி மேலாளர் பொமண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்வில் விவசாயிகளுக்கு நானோ உரங்கள் இயற்கை விவசாயம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது, முன்னதாக இஃப்கோ நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருந்து வந்த மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற விவசாயி இறந்ததற்கு நிறுவனத்தின் சார்பாக விபத்து காப்பீட்டு ரூபாய் சங்கடகர பீமா யோஜனா மூலம் ரூ 1 லட்சம் 30 ஆயிரம் காசோலையை இஃப்கோ நிறுவன ஊழியர்கள் அவரது குடும்பத்திற்கு வழங்கினர், பின்பு கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இஃப்கோ நிறுவனம் சார்பாக மரக்கன்றுகள், நானோ யூரியா திரவ உரம் வழங்கப்பட்டது, விழாவிற்கான ஏற்பாட்டினை இப்க்கோ பஜார் விற்பனை அலுவலர்கள் சங்கர் மற்றும் ராகுல் ராகவேந்தர் செய்திருந்தனர்.