

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் அப்பா தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் அவரது அலுவலகம் முன் தினந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை முன்னிட்டு ஏழை எளிய தொழிலாளர்கள், படைப்பாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.