

துறையூர்:
கண்ணனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்##
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் 11 10 2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் வேல்முருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா கலந்து கொண்டார்.
மற்றும் கால்நடைத்துறை மீனா,கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெர்ணதத் சகாயம், சுகாதாரத்துறை சதீஷ் ஆனந்த் ,கூட்டுறவுத்துறை அனந்தராமன் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் வருவாய்த்துறையினர் மின்சார வாரியத் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாதிப் பெயரைக் கொண்ட தெருக்கள் போன்றவைகளை மாற்றி சாதி அல்லாத பெயர்களை வைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசாணை வெளியிட்டதை தொடர்நது அது பற்றிய முழு விளக்கங்களை பொதுமக்களுக்கு தெரிவித்ததாக ஊராட்சி செயலர் வேல்முருகன் தெரிவித்தார். கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று இருந்த பொது மக்களிடம் உரையாற்றியதை நேரடி ஒளிபரப்பு
செய்யப்பட்டது. கூட்டத்திற்கு கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக வேல்முருகன் தெரிவித்தார்.