Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூரில் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

0 24
kaveri murasu ad

துறையூரில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்##

oplus_2048
திருச்சி மாவட்டம் துறையூரில் துறையூர் வட்ட மையம் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 14 10 2025 அன்று மாலை 6 மணி அளவில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அலுவலக “உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 15,700ஐ வழங்க வேண்டும்”
“இறந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களின் சிபிஎஸ் இறுதித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்”
“கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்”
“விஏஓ வில் இருந்து உதவியாளர் பதவி உயர்வு பெற 10 பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற கால வரையறையை 6 ஆண்டாக மாற்றம் செய்தது போல் கிராம உதவியாளரிலிருந்து விஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டு கால வரையறையை 6 ஆண்டாக விதி திருத்தம் செய்திட வேண்டும்”
“வருவாய் துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் 50 சதவீத கிராம உதவியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும்”போன்ற பல்வேறு கோரிக்கைகள் தமிகஅரசுக்கு முன் வைக்கப்பட்டன.
கூட்டத்திற்கு வட்டத் தலைவர் பிரவீன் தலைமை வகித்தார்.
வட்டச் செயலாளர் ரமா நந்தினி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்டத் தலைவர் திருச்சி மாவட்டம் நடராஜ், சத்தியா மாவட்ட செயலாளர், சதீஸ்வரன் மாவட்ட பொருளாளர் ஆகியோர் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
சிறப்புரை மாநில செயலாளர் கார்த்திக்,
முன்னிலை உத்தண்டன், முருகன், அகஸ்டின் ராஜ், சுபத்ரா, பிரபாகரன், நிஷாந்த், சிவகலை, சுமதி ஆகியோர்.
இன்பராஜ், வளனரசு, கென்னடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
துறையூர் வட்ட பொருளாளர் யோகலட்சுமி நன்றி உரை நிகழ்த்தினார்.
Leave A Reply

Your email address will not be published.