

உப்பிலியபுரம்:வைரிசெட்டிபாளை
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வைரி செட்டிபாளையத்தில் 16 10 2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நடைபெற்றது.
முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி மற்றும் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
முகாமிற்கு வரவேற்புரை உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன்.
முன்னிலை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ் , பேரூர் செயலாளர் வெள்ளையன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் , பெரியண்ணன் மற்றும்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனோகரன்,நளினி
சுப்பிரமணியன் ஆகியோர்.
முகாமில் சுமார் 15க்கு மேற்பட்ட அரசுத்துறைகள் கலந்து கொண்டன.வைரிசெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அந்தந்த துறை சார்ந்தவர்களிடம் அளித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வைரி செட்டிபாளையம் ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.
மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு களப்பணியில் இருந்தனர்.