

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய தூய்மை காவலர்களுக்கு “பாவை பவுண்டேஷன்” சார்பில் முதல் உதவி பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரிப்ளக்ட் ஜாக்கெட்,ஷு, கையுறை போன்ற 12 பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டு அவர்களின் அளப்பரியா பணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் பாவை பவுண்டேஷன் நிறுவனத்தினர்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், பிரபாகரன் மற்றும் மேலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு பாவை பவுண்டேஷன் சார்பில் முதலுதவி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு பாவை பவுண்டேஷன் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின்.