

⚠️ பராமரிப்பு பணிகள் காரணமாக 20.12.2025 அன்று திருச்சியில் மின் நிறுத்தம்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருச்சி 110 கி.வோ. கிரிட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக 20.12.2025 (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இதனால் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு, ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், ஜென்னிபிளாசா, தலைமை தபால் நிலையம், முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மேலும் உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம். நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், பிராட்டியூர், ராம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.