உப்பிலியபுரம் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்##
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் 24-12-25 இன்று காலை அண்ணா சிலை அருகில் உப்பிலியபுரம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆளும் மத்திய பாஜக அரசு சிதைக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி மத்திய அரசை கண்டித்து உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கூட்டம்
உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ந.அசோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் மாவட்டத் துணைச் செயலாளர் சோபனபுரம் கனகராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கலை என்கிற கலைச்செல்வன் மற்றும் தோழமைக் கட்சியினர் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.