

“நிதியில்லை” “நூறுநாள் வேலை இல்லை”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவிற்க்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து இன்று மாலை 12-02-26 திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன்,நகர் மன்ற உறுப்பினர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,தலைமைக்கழக பேச்சாளர் துரை பாண்டியன்,நகர கவுன்சிலர் அம்மன்பாபு, கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஆதனூர் ரவிச்சந்திரன், மற்றும் ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மாபெரும் கண்டன குரல்கள் எழுப்பினர்.
பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா நன்றியுரை நிகழ்த்தினார்.கூட்டத்திற்க்கு துறையூர் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.