Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

திருச்சி முழுவதும் பரபரப்பு

0 11
kaveri murasu ad

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!: தீவிர சோதனை

திருச்சி மாவட்டத்தில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர், ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் பதற்றம் நிலவுகிறது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சோதனை முடிவில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.