

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கீரம்பூரில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தந்தை ரோவர் வேளாண்மை மாணவர்கள்.

(04.02.2026) அன்று தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், பெரம்பலூர் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களின், RAWE (ஊரக வேளாண் பணி அனுபவம்) திட்டத்தின் ஒரு பகுதியாக கீரம்பூர் கிராமத்தில் உலக புற்றுநோய் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் ஏற்படும் முக்கிய காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர். புகையிலை, மது பழக்கம், தவறான உணவுப் பழக்கம் போன்றவை புற்றுநோயை அதிகரிக்கும் என்பதை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் புற்றுநோய்க்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். “புகையிலை மற்றும் மதுப் பழக்கங்களைத் தவிர்ப்போம், ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவோம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம், காலந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வோம்” என அனைவரும் ஒருமித்த குரலில் உறுதிமொழி எடுத்தனர்.
மாணவர்கள் வண்ணமயமான படங்கள், போஸ்டர்கள் மற்றும் விளக்க அட்டைகளின் மூலம் புற்றுநோய் ஏற்படும் காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்கினர். குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் கதை மற்றும் பட விளக்க முறைகளும் பயன்படுத்தப்பட்டதாகவும் மேலும் நிகழ்வில்
ச. ஹரி விக்னேஷ், பொ. ஜெயபிரபு, சீ. ஜெய பிரகாஷ், ரா. ஹேமச்சந்திரன், சௌ. கோகுல்நாத், ஜெய சூர்யா டி., ஜோஸ்வா கிருஸ்வின், வி. ஜெய்வந்த், வ. ஜெயவர்மன் மற்றும் ஜெ. ஜெயசாய்ராம் ஆகியோர் இதில் பங்கேற்ற தாகவும்
தெரிவித்தனர்.