

“துறையூரில் முதலமைச்சரின் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026”
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முதலமைச்சரின் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு இன்று 25 1 2026 அன்று காலை திருச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சாந்தி, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் சுரேஷ் (டென்னிஸ் கோச்), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைராஜ், பார்த்தசாரதி மற்றும் துறையூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை சரவணன் வீரபத்திரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் கண்ணதாசன் சந்திரசேகர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 34 ஊராட்சி கிராம பகுதிகளில் இருந்தும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். “இது நம்ம ஆட்டம் 2026” துறையூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக 3000-மும், இரண்டாம் பரிசாக 2000-மும், மூன்றாம் பரிசாக 1000-மும் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.