Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சியில் கல்வி கடன் சிறப்பு முகாம் கலெக்டர் சரவணன் அழைப்பு

0 73
kaveri murasu ad

நாளை கல்லூரி மாணவா்கள் கல்விக் கடன் பெறும் வகையிலான சிறப்பு முகாம்

திருச்சியில் கல்லூரி மாணவா்கள் கல்விக் கடன் பெறும் வகையிலான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமில் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளும் பங்கேற்க உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பிசியோதெரபி கல்லூரிகள், பி. பாா்ம் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐடிஐ-களில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மாணவா் மற்றும் பெற்றோரின் ஆதாா் அட்டை, பான்காா்டு, மாணவா் சாதிச்சான்று, பெற்றோா் ஆண்டு வருமானச் சான்று, மாணவா் மற்றும் பெற்றோா் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், 10-, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ். கல்விச் சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சோ்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், கல்வி பயிலும் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, கடன் பெறும் வங்கியின் பெயா் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமுக்கு நேரில் வந்து பயன் பெறலாம் என ஆட்சியா் வே. சரவணன் அழைப்பு விடுத்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.