

காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சீம கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் எடுத்தவர் விலை உயர்ந்த பல்வேறு மரங்களை அனுமதியில்லாமல் வெட்டுவதாக முசிறி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள கிடாரம் கிராமத்தில் பிள்ளையார், மாரியம்மன், காளியம்மன், ஆகிய இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் உள்ளது, இக்கோவிலுக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில் உள்ள சீம கருவேலை மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ஏலம் விடப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,

ஆனால் ஏலதாரர் சீமை கருவேல மரங்களுடன் அப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த வேப்பமரம், வாகை மரம், ஊஞ்சல் மரம், பனைமரம், வேலமரம் உள்ளிட்ட சில பல்வேறு மரங்களை கோவில் செயல் அலுவலர் வெட்டக் கூறியதாக கூறி மரங்களை வெட்டுவதாகவும், மரங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ள பச்சை மரங்கள் என்றும் மரங்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறி முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மரங்களை வெட்டுபவர் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்,மேற்கூரிய மரங்களை வெட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி கிடாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தர்மலிங்கம், சுப்புராஜன், மாரிமுத்து ஆகியோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
