Trichy Kaveri Murasu
kaveri murasu ad

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகள் பதிவை ரத்து செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்

0 107
kaveri murasu ad

*தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதன் விவரம்*

1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)

2. அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)

3. அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி

4. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்

5. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்

6. அகில இந்திய சத்தியஜோதி கட்சி

7. அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்

8. அனைத்து மக்கள் நீதி கட்சி

9. அன்பு உதயம் கட்சி

10. அன்னை மக்கள் இயக்கம்

11. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி

12. அண்ணன் தமிழக எழுச்சி கழகம்

13. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்

14. எழுச்சி தேசம் கட்சி 15.கோகுல மக்கள் கட்சி

16. இந்திய லவ்வர்ஸ் கட்சி

17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்

18. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

19. மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி

20. மக்கள் தேசிய கட்சி

21. மக்கள் கூட்டமைப்பு கட்சி

22. மக்களாட்சி முன்னேற்ற கழகம்

23. மனிதநேய ஜனநாயக கட்சி

24. மனிதநேய மக்கள் கட்சி

25. பச்சை தமிழகம் கட்சி

26. பெருந்தலைவர் மக்கள் கட்சி

27. சமத்துவ மக்கள் கழகம்

28. சிறுபான்மை மக்கள் நல கட்சி

29. சூப்பர் நேஷன் கட்சி

30. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்

31. தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்

32. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

33. தமிழர் தேசிய முன்னணி

34. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி

35. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி

36. தமிழர் முன்னேற்ற கழகம்

37. தொழிலாளர் கட்சி

38. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்

39. உரிமை மீட்பு கழகம்

40. வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி

41. விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்

42. விஜய பாரத மக்கள் கட்சி.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் திருச்செங்கோடு எம்எல்ஏவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார். ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் உள்ளது.

ஜவாஹிருல்லாவின்மனிதநேய மக்கள் கட்சி கடந்த மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜவாஹிருல்லாஹ், அப்துல்சமது ஆகிய இருவர் எம்எல்ஏவாக உள்ளனர். ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் மனிதநேய மக்கள் கட்சியும் உள்ளது.

ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,
அதிமுக, பாஜ கூட்டணியில் 2021தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்திலும் போட்டியிட்டது.
ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் உள்ளது.

2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்த தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தின் அனைத்து சட்டமன்றம் மற்றும் லோக்சபா தொகுதிகளில் நோட்டா பரப்புரை செய்து நோட்டாவில் 1.4% வாக்குகள் விழுவதற்கு காரணமாக இருந்த பூமொழியின் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, சென்ற சட்டமன்றம் மற்றும் லோக்சபா தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்தது. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் மேற்கண்ட இக்கட்சிகளின் பெயரில் போட்டியிடாததால், கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.