Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு

0 10
kaveri murasu ad

திருச்சி குழந்தை உதவி மையத்தில் 6 காலி பணியிடங்கள்

 

 

STAFF WANTED திருச்சி குழந்தை உதவி மையத்தில் காலியாகவுள்ள 3 மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் 3 வழக்குப் பணியாளர் (Case Worker) என மொத்தம் 6 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

குழந்தைகள் உதவி மையம் என்பது துன்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்யும் ஒரு தொலைபேசி எண் சேவையாகும். இந்தியாவில், 1098 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். இந்த சேவை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, மேலும் 24 மணி நேரமும், இலவசமாகவும் குழந்தைகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்பு தேவைகளை நிவர்த்தி செய்கிறது.

 

SCHOOL STAFF WANTED

தமிழ்நாடு அரசு மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி குழந்தை உதவி மையத்தில் காலியாகவுள்ள 3 மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் 3 வழக்குப் பணியாளர் (Case Worker) என மொத்தம் 6 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் தகவல் தொடர்புத்திறன் படித்தவராகவும் இருக்க வேண்டும். மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூகம் சார்ந்த சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த பணி இடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு மாத சம்பளம் ஆக 18,000 ரூபாயும், மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு மாத சம்பளம் 20,000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணி இடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchirappalli.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, முதல் தளம், மெக்டொனால்ட் ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சி – 620 001 என்ற முகவரிக்கு வருகின்ற 24.09. 2025 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக இலவசமாக விண்ணப்பிக்க வேண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.