

திருச்சி மாவட்டம் துறையூரில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா துறையூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் மாவட்ட இளைஞரணி தலைவர் மகாமுனி,மாநில ப.க.அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில் குமார்,

மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தினேஷ் பாபு,மாவட்ட மாணவரணி தலைவர் தன்ராஜ்,மாவட்ட மாணவரணி செயலாளர் விஷ்ணு வர்தன்,மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரண் ராஜ், உப்பிலியபுரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மாராடி எம் ஏ. ரமேஷ்,மாவட்ட ப. க. துணை செயலாளர் எஸ். என். புதூர். கருணாகரன்,மாவட்ட ப. க. செயலாளர் பிரபு,மாவட்ட ப. க. துணை தலைவர் கலைப் பிரியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காவியா,துறையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் வரதராஜன்,துறையூர் நகர திராவிடர் கழக தலைவர் இராஜா, துறையூர் நகர மாணவரணி தலைவர் சர்ஜுன்,துறையூர் நகர இளைஞரணி தலைவர் சிக்கத்தம்பூர் முரளி,பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் பாலகிருஷ்ணன்,கோர்ட் எம்.ஆர். சந்திர போஸ்,சிங்களாந்தபுரம் கிளைக் கழக தலைவர் ஞான சேகரன்,மாவட்ட மகளிரணி மாலினி சண்முகம்,ஆட்டோ அழகு மலை, பெரியார் பிஞ்சுகள் இனியன் செல்வா, மலரிதழ்,டார்வின் பெரியார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பெரியார் தொண்டு,கொள்கை பற்றி மாவட்ட தலைவர் மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார்.
தந்தை பெரியார் வாழ்க! வாழ்க!
என்று புகழ் முழக்கம் எழுப்பட்டு பொநுமக்களுக்கு இனிப்பு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

விழாவிற்கு கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை துறையூர் திராவிடர் கழகம் சார்பில் தெரிவித்துக்கொண்டனர்.
