Trichy Kaveri Murasu
kaveri murasu ad

முன்னாள் முதல்வர் காலமானார்

0 10
kaveri murasu ad

*கேரள முன்னாள் முதல்வர் காலமானார்*

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான அச்சுதானந்தன்(102) காலமானார். கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிர் பிரிந்தது. இவர் 2006 – 2011 வரை கேரள முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்திலும் பின்னர் தர்பார் ஹாலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆலப்புழா மாவட்டத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.