திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோபனபுரம் ஊராட்சியில்
ஓசரப்பள்ளி கிராமத்தில் சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் நீண்ட காலமாக அவதியுற்று வந்தனர்.பொதுமக்களின் கஷ்டம் அறிந்து தற்போது சுமார் 2.70 கோடி மதிப்பீட்டில் சோபனபுரம் முதல் ஓசரப்பள்ளி வரை சாலை மேம்படுத்துதல் மற்றும் 62.79 லட்சம் மதிப்பீட்டில் சோபனபுரம் பள்ளி முதல் கடப்பாக்கல் வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஓசரப்பள்ளி கிராமத்தில் 20 2 2026 அன்று மதியம் 3 மணி அளவில் நடைபெற்றது.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நெரு அடிக்கல் நாட்டினார். மேலும் கிராமத்தின் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வுகளை உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சோபனபுரம் கனகராஜ், திமுக ஓசரப்பள்ளி கிளைச் செயலாளர் சுப்ரமணி மற்றும் உப்பிலியபுரம் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.