Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

சங்கத்தலைவர் இ.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது

0 35
kaveri murasu ad
##துறையூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்##

திருச்சி மாவட்டம் துறையூரில் 30 8 2025 அன்று காலை துறையூர் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துறையூர் ரோட்டரி சங்கம், சன் பல் மருத்துவமனை மற்றும் ஓம் இயற்கை மருத்துவமனை மற்றும் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு துறையூர் ரோட்டரி சங்க தலைவர் Rtn. இ.ஆனந்த் தலைமை வகித்தார்.சேவை திட்ட தலைவர் Rtn.தியாகராஜன், செயலாளர் Rtn.இரா.பாஸ்கர், பொருளாளர் Rtn.வே.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமில் பல் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் சிகிச்சைகளுக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பல் மருத்துவ சிகிச்சையான பல் சீரமைப்பு, வேர் சிகிச்சை, பல் எடுத்தல், பல் அடைத்தல், குழந்தை பல் சிகிச்சை போன்றவைகளுக்கும், இயற்கை மருத்துவங்களான உணவு முறை மாற்றம், நோய் சார்ந்த யோகா பயிற்சி, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில் பல் மருத்துவத் திட்டத் தலைவர்கள் Rtn. கே ரமேஷ்,Rtn.கே. சதானந்தம் மற்றும் மருத்துவர்கள், மற்றும் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் துறையூர் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனையை பெற்று பயனடைந்ததாக துறையூர் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்த் தெரிவித்தார். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
Leave A Reply

Your email address will not be published.