

துறையூர் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா##
##காவல் ஆய்வாளர் முத்தையன் தேசிய கொடி ஏற்றினார்##
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
துறையூர் காவல் நிலைய வளாகத்தில் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவலர்களின் கொடி அணிவகுப்பு மரியாதை செலுத்துதல் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் முத்தையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர்கள் தினேஷ், ராஜதுரை, தமிழ்ச்செல்வன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வடிவேல், சஞ்சீவி, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.