Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் தொகுதிக்கு போட்டியிட வழக்கறிஞர் ரம்யா பெரியசாமி விருப்ப மனு

0 225
kaveri murasu ad

சென்னை உயர்நீதிமன்றம் பிரபல வழக்கறிஞர் ரம்யா பெரியசாமி துறையூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியினை சொந்த ஊராகக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரம்யா பெரியசாமி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் துறையூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 26 2 2026 அன்று விருப்ப மனு அளித்துள்ளார்.

விருப்ப மனு அளித்ததை முன்னிட்டு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருக்கு என் நேருவை சந்தித்து ஆதரவினை நல்கி வாழ்த்துக்களை பெற்றார்.

ரம்யா பெரியசாமி தாத்தா

தொண்டு வ.வீராசாமி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

தந்தை பெரியாரின் சிறந்த நண்பராகவும் இருந்து வந்திருக்கிறார்.

மேலும் அகில இந்திய அம்பேத்கர் மிஷன் அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சமூக சேவைகளையும் கல்வி பயில முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் அமைத்து நல்லதொரு கல்வியினையும் வழங்கி வருகிறார்.

வருடம் தோறும் பிறந்தநாள் மற்றும் விழா நாட்களில் ஏழை எளியோருக்கு அன்னதானமும் செய்து வருகிறார்.

மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு சமூக சேவைகளையும் சமூகத்தில் சிறந்து விளங்கும் ஆன்றோர் சான்றோர்க்கு நல் உதவிகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.