

#காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயணா பிரம்மேந்திர சுவாமிகள் மடாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர்
“நமது பாரத நாடு ஆன்மீக பூமி”
இங்கு தான் வேதங்களும் உபநிஷத்துக்களும்
மக்கள் நிறைவாழ்வு வாழ இறைவனால் அருளப்பட்டன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மகான்கள் அவதரித்து வேதங்களின் கருத்துக்களை மக்கள் மேம்பட உபதேசித்தும் வந்துள்ளனர்,

அத்தகைய மகான்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் தோன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு துறவறம் பூண்டு அஷ்டமா சித்திகளும் கைவர பெற்று நமது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் 120 வருட காலம் வாழ்ந்து மக்களுக்கு இறை ஞானத்தை எளிமையான முறையில் போதித்து வந்தவர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர சுவாமிகள் ஆவார்.சுவாமிகள் ஒரு பிடி காவேரி மணலும் நேர்மை அருந்தி வாழ்ந்து 1912 ஆம் ஆண்டு மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்து சூட்சும நிலையில் இருந்து அருள்பாளித்துக் கொண்டுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் சுவாமிகளின் குருபூஜை மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
சுவாமிகளில் அதிஷ்டானத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய குருவருளும் திருவருளும் கூட்டி வைத்தபடியால் மடாலயத்தில் திருப்பணிகள் செய்ய பெற்று நிகழும்
ஸ்ரீ விஷ்வாவசு ஆண்டு ஆவணி மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம், துலா லக்னம் சித்தயோகம் கூடிய நன்னாளில் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா மஹராஜ் அவர்கள் நிறுவனத் தலைவர், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் அவர்கள் தலைமையில் பல்வேறு கட்ட யாகஜால சிறப்பு பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கலசம் புறப்படுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று விமான கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக
கும்பாபிஷேக விழா நடைபெற்றது,
விழாவில் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர சுவாமிகள் மடாலயம் தலைவர் மாணிக்கம் உதவி தலைவர் ராஜா கோபாலன், ஆன்மீக குரு முதல்வர் சுவாமி இரத்தினானந்தா சரஸ்வதி, செயலாளர் கதிர்வேல் ஆகியோர்கள் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தேதி 14-09-25
முசிறி செய்தியாளர் க.சுந்தரேசன்
செல் 9488888589