

மக்கள் சட்ட உரிமைகள் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று 14.9.2025 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்செங்கோடு பகுதி மக்களுக்காக குமாரமங்கலம் பிரிவில் பொதுமக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. ஆலோசனை முகாம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இயக்கத்தின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முனைவர்.க. வழக்கறிஞர் மதன்ராஜ் பொதுமக்களின் சட்டம் சார்ந்த பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியான தீர்வுகளை வழங்கினார். முகாமில் திருச்செங்கோடு பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இம்முகாமை இயக்கத்தின் மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் கோமதி ஜெயம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் திருச்செங்கோடு நகர செயலாளர் தமிழ் செல்வி முன்னின்று நடத்தினர். திருச்செங்கோடு எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இயக்கத்தின் தலைவர் சுரேஷ் பேசுகையில் “நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்படும் என்று உறுதி கூறினார் மேலும் சாமானியமக்கள் அனைவரும் அறிய வேண்டிய அடிப்படை சட்டங்களை சட்ட புத்தகமாக விரைவில் இயக்கத்தின் மூலம் வெளியிடப்படும் என்று கூறினார்.