

தொட்டியம்:காட்டுப்புத்தூர் பகுதியில் உலோக செப்பு திருமேனிகள் கண்டெடுப்பு##
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் கிழக்கு வருவாய் கிராமமான நத்தமேடு பகுதியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட புறம்போக்கு நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு 27 9 2025 அன்று சுமார் 11:30 மணி அளவில் அஸ்திவாரம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதற்காக குழி தோண்டும்போது உலோக செப்பு திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டதாக தொட்டியம் வட்டாட்சியருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற பேரில் ஆய்வு செய்ததில் சுமார் 14 உலோக செப்பு திருமேனிகளும் 7 பூஜைக்காக பயன்படுத்தப்படும் சங்கு பீடங்கள் போன்றவை கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்படி பொருட்கள் உடனடியாக தொட்டியம் வட்டாட்சியரால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உலோக செப்பு திருமேனிகள் மற்றும் பொருட்கள் “விஷ்ணு துர்க்கை” “தேவியுடன் பணிப்பெண்” “நடராஜர் சிலை உடைந்த நிலையில்” “தட்சிணாமூர்த்தி” “விநாயகர்” “விநாயகர் நின்ற நிலையில்” “தேவி சிவன்” “தேவி” “தேவி” “சந்திரசேகர்” “சீதாதேவி உடைந்த நிலையில்” “அமர்ந்த நிலையில் சிவன் பார்வதி” “கோதண்டராமன்” “உடைந்த பூஜை பொருட்கள்” “சங்கு” “பீடம் உடைந்த நிலையில்” “பீடம்” “தாங்கிகள்” “திருவாச்சி பெரியது” “திருவாச்சி உடைந்த நிலையில் சிறியது 4 துண்டுகள்”போன்ற 21 உலக செப்பு திருமேனிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி தொல்லியல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொல்லியல் அலுவலர் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு முதல் நிலை அறிக்கை சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.