

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ. ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை இன்று தொடங்கி வைத்தார் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு.
தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார் .மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் பொருட்களை வாங்கி நமது தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும்படி பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்,
மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாவட்ட நகர் ஊரமைப்புக் குழுஉறுப்பினர் வைரமணி,கோ. ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன்,மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கோபி, திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் விற்றனை நிலைய மேலாளர் சங்கர் ஆகியோருடன் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.