

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் பிறந்தநாள் விழா இன்று 02-09-25
நடைபெற்றது.
முன்னதாக மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரிடம் வாழ்த்துக்கள் பெற்றார்.பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் நண்பர்கள் உறவினர்கள் என அனைவருடைய வாழ்த்துக்களையும் பெற்று அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மாண்புமிகு அமைச்சர் கே என் நேரு அவர்கள் எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜனுக்கு ஆளுயர திராவிட முன்னேற்றக் கழக மாலை அணிவித்து சிறப்பு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.