

ஆம்னி பேருந்துகளுக்காக பஞ்சப்பூரில் தனியாக ஒரு பேருந்து நிலையம் 17.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானப்பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது.
கடந்த மே 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜூலை 16- ந் தேதி முதல் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இங்கு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டும் வரை, ஆம்னி பேருந்துகள் பஞ்சப்பூர் அருகில் உள்ள காலி இடத்தில் இருந்து கிளம்பும். மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் நிற்க தடை செய்யப்பட்டு உள்ளது.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு ஆம்னி பஸ்கள் ஒழுங்காக வர வேண்டும் என்று சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பஸ்களும் சி.பி-2 செக்போஸ்ட் வழியா தான் வர வேண்டும். மதுரை வழியாக செல்லும் பஸ்களை தவிர, மத்த பஸ்கள் அனைத்தும் பஞ்சப்பூர் சந்திப்பு வரைக்கும் சென்று யூ-டர்ன் எடுத்து திரும்ப வேண்டும். இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள்ளயும், வெளியேயும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்.
ஆம்னி பேருந்துகளுக்காக பஞ்சப்பூரில் தனியாக ஒரு பேருந்து நிலையம் 17.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் வரை, தற்காலிகமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் ஒதுக்கப்பட்ட காலி இடத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்ட் திருச்சியோட வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம். நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திருச்சியோட பொருளாதாரம் இன்னும் நன்றாக இருக்கும். இந்நிலையில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.