
திருச்சி மாநகராட்சியில் 9.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நீண்ட காலமாக குடியிருந்த 116 பேருக்கு அமைச்சர் நேரு பட்டா வழங்கினார்.
1. உறையூா் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 3.05 கோடி மதிப்பிலான முதல்வா் படைப்பக கட்டுமானப் பணி
தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களுடன் இந்த கட்டிடம் இருக்கும். புதிய தொழில் முனைவோருக்காக 40 பேர் அமரும் கூட்ட அரங்கம் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் 50 பேர் அமரும் கூட்டரங்கம், அடிப்படை வசதிகளுடன் கட்டப்படும்.
2. ரூ. 4.40 கோடி மதிப்பில் உறையூா் தினசரி சந்தை கட்டும் பணி
உறையூர் மருத்துவமனை சாலையில் இந்த சந்தை அமையவுள்ளது. புதிய சந்தையில் 180 கடைகள் இருக்கும். மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர், மின்விளக்குகள் போன்ற வசதிகளும் இருக்கும். பிவிசி தொட்டியுடன் கூடிய குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
3. 22-ஆவது வாா்டு வடவூரில் ரூ. 2.90 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீா் தொட்டி,
4. 58-ஆவது வாா்டு கிராப்பட்டியில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டடம் உள்ளிட்டவைகளை அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்து, அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் 116 பேருக்கு தனி பட்டாக்களை வழங்கினாா்.
5. வார்டு எண்.26 அல்லித்துறை பிரதான சாலையில் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம்-5 வார்டு குழு கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது. புத்தூர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.
6. வார்டு எண் 51 பக்காளித் தெரு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
7. வார்டு எண் 54 பெரியமிளகுப் பாறை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 13.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
8. வார்டு எண்.58 காலனி முதல் தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
9. வார்டு எண்.54 மிளகுபாறை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
10. வார்டு எண்.56 வசந்த நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
11. வார்டு எண் 62-ல் பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
12. பேருந்து முனையம் வடக்கு பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.35.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுநீர் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
13. தெற்கு பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.35.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுநீர் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
இந்த கட்டிடங்களை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.