

#திருச்சி மாவட்டம் துறையூர் திமுக# செய்திக்குறிப்பு:
தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா ஆகியோரின் கொள்கை உருவமாய் நின்று உலகமே வியக்கும் வகையில் சமத்துவ சமூக நீதி திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தில் வருகின்ற (07.08.2025) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் துறையூர் பாலக்கரையில் இருந்து திருச்சி ரோடு வழியாக துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கலைஞர் சிலை வரை அமைதி பேரணி ஆனது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார், திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. அது சமயம் துறையூர் நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணியினர்கள், முன்னாள்,இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .*
இங்கணம்
*ந.முரளி*
*நகர செயலாளர்*
*இள. அண்ணாதுரை*
*ஒன்றிய செயலாளர் (ம)*
*சிவ.சரவணன்*
*கிழக்கு ஒன்றிய செயலாளர்*
*M.வீரபத்திரன்*
*மேற்கு ஒன்றிய செயலாளர்*
இதன் பொருட்டு தெரிவித்துள்ளனர்.