Trichy Kaveri Murasu
kaveri murasu ad

வேளாண் கல்லூரி மாணவர்களின் ஊரக வேளாண் பணி அனுபவம்

0 9
kaveri murasu ad

தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் – குளோபல் நேச்சர் ஃபவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து சமூக சேவை

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் (01.02.2026) அன்று தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு நிறுவனம், பெரம்பலூர் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் தற்போது மேற்கொண்டு வரும் RAWE (Rural Agricultural Work Experience)(ஊரக வேளாண் பணி அனுபவம்) திட்டத்தின் ஒரு பகுதியாக, குளோபல் நேச்சர் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பை நேரில் பார்வையிட்டனர்.
இந்த பயணத்தின் போது அந்த அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் விரிவாக அறிந்து கொண்டனர். குறிப்பாக ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கான உணவு வழங்கும் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள், கிராமப்புற மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நேரில் கண்டு அனுபவமாகக் கற்றனர்.
மாணவர்கள் அந்நாளில் உணவு தயாரிக்கும் பணியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு உணவு வழங்கும் சேவையிலும் நேரடியாக பங்கேற்றனர். உணவு சமைத்தல், பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் பகிர்தல், நிகழ்ச்சி ஒழுங்கமைத்தல் போன்ற பணிகளில் மாணவர்கள் குழுவாக செயல்பட்டனர்.
இந்த செயல்பாடு மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு உணர்வையும் மனிதாபிமான சிந்தனையையும் வளர்த்ததாக கல்லூரி நிர்வாகம் பாராட்டியது. விவசாய அறிவுடன் சேர்த்து சமூக சேவையையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள RAWE திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.
ச. ஹரி விக்னேஷ், பொ. ஜெயபிரபு, சீ. ஜெய பிரகாஷ், ரா. ஹேமச்சந்திரன், சௌ. கோகுல்நாத், ஜெய சூர்யா டி., ஜோஸ்வா கிருஸ்வின், வி. ஜெய்வந்த், வ. ஜெயவர்மன் மற்றும் ஜெ. ஜெயசாய்ராம் ஆகியோர் இதில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.