

தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் –
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வீரமச்சான்பட்டி கிராமத்தில் எலிகள் கட்டுப்பாடு செய்முறை விளக்கம்.
(02.02.2026) அன்று தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், பெரம்பலூர் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள், தற்போது மேற்கொண்டு வரும் RAWE (Rural Agricultural Work Experience) (ஊரக வேளாண் பணி அனுபவம்)திட்டத்தின் ஒரு பகுதியாக, வீரமச்சான்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான கள செய்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் பல்வேறு முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. எலி பொறிகள் பயன்படுத்தும் முறை, புல்வெளி சுத்தம், உயிரியல் மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த விளக்கங்கள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேலும், உலக ஈரநில தினம் (World Wetlands Day) முன்னிட்டு, ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீர்நிலைகள் பாதுகாப்பு, பறவைகள் மற்றும் உயிரினங்கள் பாதுகாப்பில் ஈரநிலங்களின் பங்கு, விவசாயத்திற்கான நீர் வள மேலாண்மை ஆகியவை குறித்து மாணவர்கள் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுக்கு பயனுள்ள அறிவு கிடைத்ததுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் உருவானது. தந்தை ரோவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களின் செயல்பாட்டை பாராட்டினர் எனவும்
ச. ஹரி விக்னேஷ், பொ. ஜெயபிரபு, சீ. ஜெய பிரகாஷ், ரா. ஹேமச்சந்திரன், சௌ. கோகுல்நாத், ஜெய சூர்யா டி., ஜோஸ்வா கிருஸ்வின், வி. ஜெய்வந்த், வ. ஜெயவர்மன் மற்றும் ஜெ. ஜெயசாய்ராம் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
