

திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அருள்மிகு சுயம்பு கோலோச்சும் முருகன் கோயிலில் இன்று (16-07-25) சஷ்டியை முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றது.

சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் நடேசன் ஜானகிராமன், மற்றும் அர்ச்சகர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாளை 17-7 2025 அன்று மாதாந்திர கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு அபிஷேகமும் மலர் அலங்காரமும் மகா தீபாராதனையும் செய்யப்பட்டு சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும்
மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை 20 7 2025 அன்று மாதாந்திர கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு காலை 10 மணி அளவில் மகா யாசகமும் 12 மணி அளவில் அபிஷேகமும் மற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்படும் என கோவில் தரப்பில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்
கா.மணிவண்ணன்