

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்சிபுரம், எ.பாதர்பேட்டை, மாராடி, ஆகிய ஊராட்சிகளுக்கு இன்று 24-09-25 காலை புதுப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நடைபெற்றது.
முகாமினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
சுமார் 15 அரசு துறைகள் கலந்து கொண்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
உப்பிலிபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், நகரச் செயலாளர் நடராஜ் மற்றும் திமுகவினர் அரசு அதிகாரிகள் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் உடனடி பட்டாக்கள் வழங்கப்பட்டன. முகாமினை ஊராட்சி செயலர்கள் பழனியாண்டி, நடராஜன்,விஜய் ஆகியோர் முகாமினை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.